ஜம்மு காஷ்மீர், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியா கட்டுபாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் எனுமிடத்தில் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது.
இத்தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இத்தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்ய ராணுவமும் போலீசும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாரமுல்லா எனும் பகுதியில் பாதுகாப்பு படையினரால் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)