பொது

ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் 70% அதிகமான வாக்குகள் பதிவாகும்

22/04/2025 11:35 AM

பீடோர், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறுகின்றது.

முந்தைய இடைத்தேர்தல்களில் பதிவான வாக்கு விழுக்காட்டின் அடிப்படையில் இந்த எதிர்பார்ப்பு வெளிப்படுவதாக தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்தார்.

''70 விழுக்காட்டினர் வாக்களிக்க வருவார்கள். எனவே அனைத்து வாக்காளர்களும் சீக்கிரமாக வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வானிலை கணிக்க முடியாதது என்பதால் தங்களின் கடமையை சரியான முறையில் நிறைவேற்ற அனைத்து வாக்காளர்களும் சீக்கிரமாக வருகை தந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார் அவர். 

இன்று, பீடோர் இராணுவ படையின் Batalion PGA 3-ரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பு செயல்முறையை பார்வையிட்ட வந்திருந்தபோது  ரம்லான் ஹருன் அதனைக் கூறினார்.

முன்னதாக, ஜோகூரில் நடந்த மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலின்
வாக்குப்பதிவு 53.84 விழுக்காட்டில் இருந்தது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)