ஒர்லாண்டோ, 22 ஏப்ரல் (பெர்னாமா) -- அமெரிக்கா, மத்திய ஃபுலோரிடா, ஒர்லாண்டோ அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் அதிலிருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்தில் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
திங்கட்கிழமை காலை, ஒர்லாண்டோவில் இருந்து அட்லண்டா நோக்கி பயணிக்க அந்த விமான தயாராகி கொண்டிருந்தது.
அந்நிலையில், வினாமத்தின் இயந்திரத்தில் தீ ஏற்பட்டதாக டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.
தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன், விமான நிலையத்தின் மீட்பு மற்றும் தீயணைப்பு குழுவினர் தீயை அணைத்ததாகவும் அந்நிறுவனம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்திருக்கிறது.
விபத்து ஏற்படும் போது, அந்த விமானத்தில் 12 விமான ஊழியர்கள் உட்பட 282 பேர் பயணிப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]