பொது

உயர்நிலைத் துறைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் நடுத்தர தொழில்நுட்பத்தையும் அதிகரிக்கலாம்

21/04/2025 06:45 PM

ஜோகூர் பாரு, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- அடுத்த தலைமுறை தொழில்நுட்ப ஜாம்பவான்களை உருவாக்குவதற்கான சரியான நேரத்தையும் வியூக வாய்ப்பையும், ஜோகூர் சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், JS-SEZ-இன் கீழ் உள்ள அவ்விரு நாடுகளின் ஒத்துழைப்பு வழிவகுக்கிறது.

இந்நிலையில், உயர்நிலைத் துறைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று தாம் கருதுவதாக,  முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சின் துணை அமைச்சர் லியூ சின் தொங் தெரிவித்தார்.

மாறாக, உலகளாவிய தேவைகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய நடுத்தர அளவிலான தொழில்நுட்ப தீர்வுகளின் திறனை அதிகரிக்கலாம் என்று அவர் வலியுறுத்தினார்.  

அமெரிக்க சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மட்டும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பிற பின்தங்கிய சந்தைகளில் உள்ள வாய்ப்புகளை மலேசியாவும் சிங்கப்பூரும் ஆராய வேண்டும் என்றும் லியூ கூறினார்.

மலேசியா-சிங்கப்பூர் பங்காளித்துவத்தின் வழி ஆசியானை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்த முடியும் என்று, JS-SEZ கூட்டு வணிகம் மற்றும் முதலீட்டு விவாதத்தில் கலந்துகொண்ட அவர் குறிப்பிட்டார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]