அரசியல்

ஆயர் கூனிங் இடைத்தேர்தல்; சுமூகமாக நடைபெறும் முன்கூட்டியே வாக்களிப்புக்கான ஏற்பாடுகள்

21/04/2025 06:19 PM

தாப்பா, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை டுன் ஏ-இல் நடைபெறவிருக்கும் முன்கூட்டியே வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் சுமூகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு மையமாக செயல்படவிருக்கும் தப்பா, மெர்டேக்கா மண்டபத்தில் முன்கூட்டியே வாக்களிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மூன்று வாக்குச் சாவடிகளின் வாக்குகள் சேகரிக்கும் பெட்டிகளைச் சரிபார்க்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

முன்கூட்டியே வாக்களிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மூன்று வாக்குச் சாவடிகளின் தலைவர்களுடன் ஒரு மேற்பார்வையாளரும் கலந்து கொண்டார்.

வாக்குப் பெட்டிக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் போதுமானவையா என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதோடு, வாக்காளர் பதிவுக்கான வாக்களிப்புச் சீட்டு, தேர்தல் மை, வாக்குச் சீட்டு முத்திரை மற்றும் அது தொடர்புடைய இதர படிவங்களும் சரிபார்க்கப்பட்டன.

--பெர்னாமா 

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]