உலகம்

இக்குவாடோர்  அதிபர் தேர்தல்; டேனியல் நோபோவா வெற்றி 

14/04/2025 05:25 PM

சாண்டா எலெனா, 14 ஏப்ரல் (பெர்னாமா) - இக்குவாடோர் அதிபர் தேர்தலில் டேனியல் நோபோவா வெற்றி பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் மன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை முழுவதும் இடதுசாரி வேட்பாளர் Luisa Gonzalez விட நோபோவா நிலையான மற்றும் எதிர்பாராத விதமாக 12 புள்ளிகள் முன்னிலை வகித்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பு செய்யப்பட்டது.

Olon நகரில் இருந்து கருத்து தெரிவித்த 37 வயதுடைய நோபோவா , தனது வெற்றியில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தார். 

அதோடு, தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், போதைப்பொருள் கும்பல்களை எதிர்த்துப் போராடுவதற்கும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தனது உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 93 விழுக்காட்டு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், Noboa 55.8 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.

Gonzalez-இன் 44.1 விழுக்காட்டு வாக்குகளுடன் ஒப்பிடும்போது இது 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசமாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)