உலகம்

மத்திய நீக்ரோஸ் தீவில் உள்ள கன்லோன் எரிமலை வெடித்தது

08/04/2025 05:11 PM

கன்லோன், 08 ஏப்ரல் (பெர்னாமா) -- பிலிப்பைன்ஸ், மத்திய நீக்ரோஸ் தீவில் உள்ள கன்லோன்  (Kanlaon) எரிமலை இன்று காலையில் வெடித்த காட்சியை பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம், PHIVOLCS வெளியிட்டுள்ளது.

வானத்தில் சுமார் 4 கிலோமீட்டர் உயரத்திற்கு, தடிமனான சாம்பல் புகை மூட்டம் உயர்ந்து தென்மேற்கு நோக்கி நகர்வதை அக்காணொளி காட்டுகிறது.

உள்ளூர் நேரப்படி, அதிகாலை மணி 5.51-க்கு கன்லோன் எரிமலை வெடிக்கத் தொடங்கியதாகவும், அதிலிருந்து பாறைத் துகள்கள் மற்றும் அதீத வெப்பமுடைய வாயு வெளியேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அங்கு மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த எரிமலை மீண்டும் குமுறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கன்லோன் எரிமலை வெடிக்கும் சாத்தியம் இருந்ததால், பெரும்பாலான மக்கள் அப்பகுதியில் இருந்து கடந்த ஆண்டே வெளியேற்றப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)