பொது

தீ விபத்திற்கு நிலத்தை தோண்டியது காரணமா? விசாரணை மேற்கொள்ளப்படும்

01/04/2025 07:48 PM

சுபாங் ஜெயா, 01 ஏப்ரல் (பெர்னாமா) -- புத்ரா ஹெய்ட்சில் உள்ள எரிவாயு குழாயில் ஏற்பட்ட மோசமான தீ விபத்திற்கு, நிலத்தை தோண்டியது காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் இதன் உண்மை நிலவரத்தை கண்டறிய சற்று கால அவகாசம் தேவைப்படும் என்று, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முஹமட் தெரிவித்தார்.

இதன் தொடர்பில், அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் தலைமையில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படவிருப்பதாக அவர் கூறினார்.

''அறிக்கை வெளியிட இது விரைவு என்று நான் நினைக்கின்றேன். எனவே, DOSH தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் இணைந்து பிடிஆர்எம் தலைமையில், நாங்கள் விசாரனையை மேற்கொள்ளவிருக்கிறோம். எனவே, விசாரணை நிறைவடைந்தால் தான் (அறிக்கை) வெளியிட முடியும்,'' என்றார் அவர்.

புத்ரா ஹெய்ட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில், நிலத்தைத் தோண்டும் பணிகளினாலேயே இந்தத் தீ விபத்து நிகழ்ந்ததாக முன்னதாக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)