பொது

தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிதியுதவி

01/04/2025 07:49 PM

சுபாங் ஜெயா, 01 ஏப்ரல் (பெர்னாமா) -- புத்ரா ஹெய்ட்சில் நிகழ்ந்த தீ விபத்தில் மோசமாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு, 5,000 ரிங்கிட் உடனடி உதவி நிதி வழங்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.

அதோடு, மிகப்பெரிய அளவில் சேதமடையாத வீட்டின் உரிமையாளர்களுக்கு, 2,500 நிதியுதவியையும் அவர் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி, இத்தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான உதவிகளை வழங்க, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தையும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தற்போதையச் சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டவர்களின் பதற்றத்தை தணிப்பதுவுமே முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)