சுபாங் ஜெயா, 01 ஏப்ரல் (பெர்னாமா) -- சுபாங் ஜெயாவில் எரிவாயு குழாய் வெடித்ததைத் தொடர்ந்து அதன் சுற்று வட்டாரத்தில் தடை செய்யப்பட்ட மின்சார விநியோகம் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியது.
இன்று காலை தொடங்கி நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை பாதுகாப்பானது என்று அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டவுடன் விநியோக மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெனாகா நேஷனல் நிறுவனம், தி.என்.பி தெரிவித்திருக்கிறது.
மறுசீரமைப்பு செயல்முறை முழுவதும் ஒத்துழைத்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், முகநூலில் பதிவிட்ட அறிக்கை ஒன்றின் வழி தி.என்.பி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
அண்மைய நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து, அவ்வப்போது புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் வழங்கப்படும் என்று தி.என்.பி தெரிவித்துள்ளது.
மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பயனீட்டாளார்கல் கூடுதல் தகவல்களுக்கு 15454 என்ற எண்ணில் தி.என்.பி-ஐ தொடர்பு கொள்ளலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)