டமாஸ்கஸ், 31 மார்ச் (பெர்னாமா) -- பிரதமர் நியமிக்கப்படாத நிலையில் மார்ச் 29-ஆம் தேதி சிரியாவில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
அதில், 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மெட் அல்-ஷாரா புதிய அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்தார்.
முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாட்டின் ஆட்சி வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் இடைக்கால நிர்வாகம் பொருப்பு வகித்து வந்தது.
சிரியாவில் அரசு படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த பஷார் அல்-அசாட்டின் ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து நாட்டில் இருந்து தப்பி சென்ற அவர் ரஷ்யாவில் புகலிடம் நாடியுள்ளார் என்று கூறப்படுகிறது.
தற்காலிக அரசியல் அமைப்பின்படி அமைச்சரவையில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை என்றாலும் பொது செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]