உலகம்

இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி பலி

31/03/2025 05:24 PM

மினசோட்டா, 31 மார்ச் (பெர்னாமா) -- அமெரிக்கா, மினசோட்டா மாநிலத்தில் இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் விமானி உயிரிழந்தார்.

அந்த விமானம் ஒரு வீட்டின் கூரையை மோதி விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கூரையை மோதிய பின்னர் அவ்வீடு தீப்பற்றிக் கொண்டது.

விபத்து நிகழ்ந்த நேரத்தில் வீட்டிலிருந்த ஒருவர் காயமின்றி உயிர் தப்பியதாக உள்ளூர் தீயணைப்புத் துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து ஏற்பட்டதாக காரணம் இதுவரை தெரிவிக்கப்பட்டவில்லை.

காரணத்தை கண்டறிய முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]