உத்தரப் பிரதேசம், 22 மே (பெர்னாமா) -- இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் வீசிய பலத்த காற்றினால், மரங்கள் சாய்ந்து பொது வசதிகள் சேதமடைந்தன.
இதனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிலர் காயங்களுக்கும் ஆளாகினர்.
இந்திய தலைநகர் புது டெல்லியிலும் வாகனங்களின் மீது மரங்கள் சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின.
அதுமட்டுமின்றி, நொய்டா நகரில் மின்சார கோபுரம் ஒன்றும் சாய்ந்தது.
மையின்பூரி மாவட்டத்திலும் மக்கள் காயங்களுக்கு ஆளாகிய நிலையில், ஆக்ராவில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தின.
2025-ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சராசரியை விட அதிகமான பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த மாதம் கணித்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)