புத்ராஜெயா , 02 மே (பெர்னாமா) - மூன்று நாள்களில் மருந்து விலை பட்டியலை பொதுவில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால், அபராதத்தை எதிர்நோக்க நேரிடும் என்றும், நேற்று உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு, KPDN-இன் அமலாக்க அதிகாரிகள் சிகிச்சையகங்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கையை வழங்கியதாக,,,
மலேசிய தனியார் மருத்துவ அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, FPMPAM முன்வைத்துள்ள குற்றச்சாட்டை கேபிடிஎன்-இன் அமலாக்க தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் மறுத்துள்ளார்.
நேற்று சமையல் எரிவாயு மற்றும் முட்டை குறித்த சோதனை நடவடிக்கையில்கேபிடிஎன் அமலாக்கக் குழு ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள சிகிச்சையகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் விலைப் பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும் என்ற தகவல் ஊழியர்களுக்கு தெரியுமா என்றே அதிகாரிகள் கேட்டதாக DATUK AZMAN விளக்கினார்.
''எந்தவொரு தரப்புக்கும் நேற்று எந்தவொரு அறிவிக்கையையும் வெளியிடப்படாததோடு அபராத நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை. வழக்கமாக, ஒவ்வொரு நாளும் அதிகாரிகளிடமிருந்து தினசரி வழக்குகள், மற்றும் எச்சரிக்கை குறித்து அறிக்கை எங்களுக்கு கிடைக்கும். எனவே, நான் இந்த குழப்பம் குறித்து விளக்கமளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அதோடு, தொடர்ந்து சுகாதார அமைச்சுடன் இணைந்து (விலைப் பட்டியலை வைப்பது தொடர்பான) இச்சோதனை நடவடிக்கையை மேற்கொள்வோம்,'' என்றார் அவர்.
அதுமட்டுமின்றி, நாட்டின் தொழில்துறை முதிர்ச்சியாகவும் நிபுணத்துவமாகவும் உள்ளதால் அந்த புதிய விதிமுறை அமலாக்கத்தைத் தொடர்ந்து விலை பட்டியலைக் காட்சிப்படுத்தும் எந்தவொரு கையாளும் போக்கும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)