பெட்டாலிங் ஜெயா, 22 ஏப்ரல் (பெர்னாமா) -- சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கும் பெரிய அளவிலான நிறுவனங்கள் உட்பட அரசு தொடர்புடைய நிறுவனங்கள், ஜி.எல்.சி-இன் நடவடிக்கைகளை இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு, என்.ஆர்.ஈ.எஸ் ஊக்குவிக்கின்றது.
2050-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் 70 விழுக்காடு மின்சாரத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டிருக்கும் தேசிய எரிசக்தி மாற்றத்திற்கான செயல்திட்டம், என்.ஈ.டி.ஆர்-இன் மூலம் இந்நடவடிக்கைகள் அரசாங்கத்தின் முயற்சிகளுடன் ஒத்துப்போவதாக இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் கூறினார்.
இன்று, சிலாங்கூர், டமான்சாரா ஐக்கியாவில் 2,668 சூரிய மின் தகடுகள் பொறுத்துவதைப் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
சுமார் 12,000 சதுர மீட்டர் கூரையின் பரப்பளவில் பொருத்தப்பட்ட சூரிய மின் தகடுகள் ஒவ்வோர் ஆண்டும் ஒருமணி நேரத்திற்கு இரண்டு மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், கரிம வாயுவின் வெளியேற்றத்தை, வருடத்திற்கு சுமார் 1,330 டன் வரை குறைக்கவும் பங்களிக்கின்றது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]