உலகம்

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது - டிரம்ப்

19/04/2025 05:04 PM

வாஷிங்டன், டி.சி.,18 ஏப்ரல் (பெர்னாமா) -- ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை எதிர்ப்பதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் டிரம்ப் அவ்வாறு கூறியிருக்கிறார்.

''அவர்களிடம் ஆயுதம் இருந்தால், அவர்கள் (ஈரான்) அனைவரும் மிகவும் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும்,'' என்றார் அவர்.

அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இத்தாலி ரோமில் நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில், அணு சக்தி திட்டத்தை கைவிட ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால், அந்நாடு மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்று டிரம்ப் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக நெருக்கடி நீடித்து வருகிறது.

அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாக ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)