கூச்சிங், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- நாட்டின் தொடர்ச்சியான போட்டித்தன்மை மற்றும் தாங்கும் ஆற்றலை உறுதி செய்யும் பொருட்டு, தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாட்டின் நிலைத்தன்மை பாதுகாக்கப்படுவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரி விதிப்பு, நாட்டை எந்நேரத்திலும் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவுறுத்தியிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
'அதிர்ச்சியடையும் வரி விதிப்பை டோனல்ட் டிரம்ப் நிர்ணயித்தார். நமக்கு 24 விழுக்காட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. 50 விழுக்காட்டு வரி விதிப்பு கொண்ட நாடுகளும் உள்ளன. இந்தோனேசியா மற்றும் தாய்லாந்திற்கு 30 விழுக்காடு. நாம் என்ன செய்ய வேண்டும்? அது நமக்கான ஒரு நினைவூட்டல். நம் வீட்டைச் சரியாகப் பராமரிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். நமது நாடு, நமது பொருளாதாரத்தையும் கூட. நமக்கு இதுபோன்ற சூழல் நிலவும்போது நம்மால் சமாளிக்க முடியும். இதனைத்தான் தாங்கும் ஆற்றல் என்றும் கூறப்படுகிறது. நமக்கு போட்டித்தன்மை இருக்கும்,'' என்றார் அவர்.
இன்று, சரவாக், கூச்சிங்கில் மாநில அளவில் நடைபெற்ற மடானி நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)