உலகம்

பாகிஸ்தான்; வைசாகி தினத்தைக் கொண்டாட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் ஒன்றுக்கூடல்

15/04/2025 07:33 PM

நான்கானா சாஹிப், 15 ஏப்ரல் (பெர்னாமா) --   பஞ்சாப் மற்றும் வட இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படும் சீக்கிய புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் அறுவடைத் திருநாளான வைசாகியைக் கொண்டாடுவதற்கு ஆயிரக்கணக்கான சீக்கியர்கள், நேற்று பாகிஸ்தானில் கூடினர்.

முந்தைய ஆண்டுகளை விட, இவ்வாண்டு 6,500-க்கும் அதிகமான விசாக்களை இந்திய சீக்கியர்களுக்குப், பாகிஸ்தான் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் பயணிப்பதற்கான விசாவைப் பெறுவது கடினம்.

எனினும், ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பார்வையிட அனுமதியளிக்கும் வகையிலான ஒரு சிறப்பு ஏற்பாட்டை அந்நாட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

சீக்கிய மதத்தினரின் நம்பிக்கைக்குரிய தோற்றுநர் குரு நநாக்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான், நான்கானா சாஹிப்பில் வைசாகி தினம் கொண்டாடப்படுகின்றது.

லாகூரின் மேற்கு பகுதியில் சுமார் 75 கிலோமீட்டர் அதாவது 46 மைல் தூரத்தில் அமைந்துள்ள நான்கானா சாஹிப்பின் ஒன்பதாவது சீக்கியர்களின் வழிபாட்டு தலங்களில் Gurdwara Janam Asthan ஒன்றாகும்.

பெங்காலி நாள்காட்டியின் முதல் நாளான நேற்று, பாரம்பரிய புத்தாண்டை வரவேற்கும் வகையில், வங்காளதேச தலைநகரான டாக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வண்ணமயமான ஊர்வலங்கள் மற்றும் கலாச்சார விழாக்களுடன் கொண்டாடினர்.

பாரம்பரிய சிவப்பு உடையை அணிந்த மக்கள், டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் கலைக் கல்லூரி ஏற்பாடு செய்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

டாக்காவின் பிற பகுதிகளிலும், நாட்டின் இதர இடங்களிலும் இதேபோன்ற ஊர்வலங்களும் கலாச்சார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)