விளையாட்டு

மீண்டும் உலக வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்ற ஏரன் சியா- சோ வூய் இலக்கு

15/04/2025 07:10 PM

கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) - சீனா, நிங்போவில் நடைபெற்ற ஆசிய பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்த நாட்டின் தேசிய ஆடவர் இரட்டையரான  ஏரன் சியா- சோ வூய்  ஜோடி வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாரிசில் நடைபெறவிருக்கும் போட்டியில் மீண்டும் உலக வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்ற கவனம் செலுத்தி வருகின்றது.

ஆசிய அரங்கில் பெற்ற அந்த முதல் வெற்றி அந்த ஜோடிக்கு ஊக்குவிப்பாக அமைந்தாலும், புதிய பயிற்றுநரான Herry Iman Pierngadi நிர்வகிப்பின் கீழ் அவரின் பாணிக்கு தங்களை மாற்றிக் கொள்ளும் செயல்முறையில் இருக்கிறது.

"இந்த ஆண்டு உலக வெற்றியாளர் (பட்டத்தை) நாங்கள் இன்னும் இலக்காகக் கொண்டுள்ளோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், பயிற்றுநர் ஹென்ரியின் பாணியைக் கற்று கொண்டு வருகிறோம். எனவே, நாங்கள்
தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். அது நடந்தால், நடக்கும்," என்று  நாட்டின் தேசிய ஆடவர் இரட்டையர் விளையாட்டாளர் ஏரன் சியா கூறினார்.

நிங்போ ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற BAC 2025-இல் அந்த ஜோடி சென் போ யாங் - லியு இ ஜோடியை 21-19, 21-17 என்ற நேரடி செட்டில் வீழ்த்தி வெற்றியாளர் பட்டத்தை வென்றது.

இதன்வழி, BAC-இல் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெற்றியாளர் பட்டத்தை வெல்லும் மலேசியாவின் 18 ஆண்டுகால காத்திருப்பு நிறைவுக்கு வந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)