கோலாலம்பூர், 12 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆயர் கூனிங் இடைத்தேர்தல் காலக்கட்டத்தில், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களையும், புகார்களையும் பொதுமக்கள் தெரிவிப்பதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்)அங்கு ஒரு நடவடிக்கை அறையை தொடங்கியுள்ளது.
பண்டார் பேரு ராயாவில் அமைக்கப்பட்டுள்ள அந்த நடவடிக்கை அறை இன்று தொடங்கி, இம்மாதம் 26ஆம் தேதி வரை, 24 மணிநேரமும் செயல்படும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எஸ்.பி.ஆர்.எம் கூறியுள்ளது.
இதைத் தவிர்த்து ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பிலான எந்தவொரு புகாரையும் பொதுமக்கள் திரையில் காணும் எண்ணுக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிவிக்கலாம்.
மேலும், 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் மற்றும் 1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டம் ஆகியவற்றின் கீழ், தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் நினைவூட்டப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)