பொது

புத்ரா ஹைட்ஸில் துப்புரவு பணிகள் 

12/04/2025 03:57 PM

புத்ரா ஹைட்ஸ், 12 ஏப்ரல் (பெர்னாமா) -- புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கம்போங் கோலா சுங்கை பாரு பாதுகாப்பானது என தீயணைப்புத் துறையால் உறுதி செய்யப்பட்டு, உள்ளே செல்ல போலீஸ் அனுமதி வழங்கியிருப்பதால், அங்கே துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்,

துப்புரவுப் பணிகள் நிறைவடைந்ததும், வாடகை செயல்முறை மற்றும் வீட்டைப் புதுப்பித்தல் உள்ளிட்ட மறுசீறமைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும் என்று அமிருடின் ஷாரி கூறினார்.

“அவர்கள் வீடுகளைச் சுத்தம் செய்கிறார்கள். மேலும் வாடகை மற்றும் பழுதுபார்ப்பு குறித்த 2 விவகாரங்களில் அடுத்த வாரம் நாம் கவனம் செலுத்தலாம். குறிப்பாகப் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை எவ்வாறு சரிசெய்வது குறித்து மத்திய அரசாங்கத்திடமிருந்து தெளிவான உறுதிமொழியைப் பெற்ற பிறகு அது மேற்கொள்ளப்படும்,” என்றார் அவர்.

இன்று, தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை அவர் தொடக்கி வைத்தார்.

4 பிரிவுகளாக மேற்கொள்ளப்படும் இந்த துப்புரவு பணிகளில், இன்று 20-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் மற்றும் அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த 2,095 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)