உலகம்

அமெரிக்காவிற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள உலக வர்த்தக அமைப்பு

12/04/2025 03:38 PM

வாஷிங்டன், 12 ஏப்ரல் (பெர்னாமா) - சீனப் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்திய வாஷிங்டனின் அண்மைய நடவடிக்கையைத் தொடர்ந்து, உலக வர்த்தக அமைப்பு, WTO-இன் தகராறு தீர்வு செயல்முறை மூலம் அமெரிக்காவிற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளதாக சீனாவின் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்நடவடிக்கை, ஒருதலைப்பட்சமான செயல் என்றும் வற்புறுத்தலின் வழி மேற்கொள்ளப்படும்போது அவை WTO விதிகளை மீறுவதாகவும் அவ்வமைச்சு கூறியுள்ளது. 

அதோடு, அது அனைத்துலக பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கைப் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. 

சீனா தனது சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைத் தொடர்ந்து பாதுகாப்பதால், தமது நாட்டு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்து ஒருதலைப்பட்ச வரி நடவடிக்கைகளையும் அமெரிக்கா ரத்து செய்ய வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தி உள்ளது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)