உலகம்

இந்தியா & நேபாளத்தில் கனமழையினால் சுமார் 100 பேர் பலி

11/04/2025 07:43 PM

புது டெல்லி, 11 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியா மற்றும் நேபாளத்தில் பல பகுதிகளில் பெய்த கனமழையால் புதன்கிழமை தொடங்கி சுமார் 100 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

மழை தொடர்ந்து பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேற்கு பகுதியில் கடுமையான வெப்பமும் கிழக்கு மற்றும் மத்திய வட்டாரங்களில் கூடிய மழையும் பெய்யும்.

கடந்த புதன்கிழமை பல ஆபத்து எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)