உலகம்

நியூயார்க்கில் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்ததில் அறுவர் பலி  

11/04/2025 03:07 PM

நியூயார்க், 11 ஏப்ரல் (பெர்னாமா) -- அமெரிக்கா, நியூயார்க் நகரில் ஹெலிகாப்டர் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அறுவர்  உயிரிழந்தனர்.

கட்டுப்பாட்டை இழுந்ததால் அந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

வியாழக்கிழமை அமெரிக்க நேரப்படி பிற்பகலில் மன்ஹாட்டன் அருகே உள்ள ஹட்சன் ஆற்றில் இந்த ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது.

உயிரிழந்தவர்களில் மூவர் சிறுவர்கள் என்று நியூயார்க் நகர மேயர் எரிக் அடாம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

விமானியைத் தவிர்த்து இதர ஐவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக, New York Helicopter Tours எனும் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டர், பிற்பகல் மணி 3-க்கு புறப்பட்டதாக எரிக் அடாம்ஸ் கூறினார்.

விமானி, இரு பெரியவர்கள் மற்றும் மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்கபப்ட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)