சாண்டோ டொமிங்கோ, 10 ஏப்ரல் (பெர்னாமா) -- டொமினிகன் குடியரசில் இரவு கேளிக்கை விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 124-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடுவது இன்னும் கடினமாகி இருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடிபாடுகளில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
எனினும், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து, அதிகாரிகள் உயிர் பிழைத்தவர்கள் யாரையும் இடிபாடுகளில் இருந்து வெளியேற்றவில்லை.
இதனிடையே, மீட்புப் பணியாளர்கள் தங்கள் தேடல் பணிகளை நிறைவு செய்ய இன்னும் 24 முதல் 36 மணிநேரம் வரை தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் அவசரகால செயல்பாட்டு மையத்தின் தலைவர்ஜுவான் மானுவல் மெண்டஸ் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளை விரைவுப்படுத்த அவசரகால குழுவினர் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)