நியூயார்க், 09 ஏப்ரல் (பெர்னாமா) -- காசாவில் உதவிப் பொருள்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் இஸ்ரேலின் புதிய திட்டத்தை ஐ.நா.வின் தலைமை செயளாலர் அந்தோனியோ குட்டெரெஸ் நிராகரித்தார்.
''ஐ.நா. நிறுவனங்களும் அனைத்து ஆதரவு தரப்புகளும் (உதவிகள்) வழங்கத் தயாராகவும் உறுதியாகவும் உள்ளனர். ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகளின் புதிதாக முன்மொழியப்பட்ட உதவி விநியோக அங்கீகார வழிமுறைகள் உதவியை இரக்கமின்றி கட்டுப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. நான் தெளிவாகக் கூறுகிறேன்: மனிதாபிமானக் கொள்கைகளை முழுமையாக மதிக்காத எந்தவொரு ஏற்பாட்டிலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம்,'' என்றார் அவர்.
உதவியை ஒருங்கிணைக்கும் இஸ்ரேலிய இராணுவ நிறுவனமான COGAT, கடந்த வாரம் ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் அனைத்துலக உதவி குழுக்களைச் சந்தித்து.
அச்சந்திப்பில் காசாவிற்கு வழங்கப்படும் உதவிகளைக் கண்காணிக்கும் புதியத் திட்டத்தை முன்மொழிந்தது.
இத்திட்டம் உதவி வழங்கும் பணியைக் கட்டுப்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு போதிய உதவிகள் கிடைப்பதை தடுக்கும் அபாயத்தைக் கொண்டிருப்பதாக அவர் விளக்கினார்.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கி காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களினால், இதுவரை 50,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)