உலகம்

சீனா மீது 104% வரி விதிப்பை அமல்படுத்துகிறது அமெரிக்கா

09/04/2025 01:16 PM

வாஷிங்டன் டி.சி. 09 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று தொடங்கி, சீனா மீது அமெரிக்கா 104 விழுக்காட்டு வரியை விதிக்கவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இன்று பின்னிரவு தொடங்கி இந்த வரி விதிப்பு அமலுக்கு வருவதாக, அதன் பேச்சாளர் கெரலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

சீனா அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட லீவிட், அதனை எதிர்க்கும் பெய்ஜிங்கின் குணம் தவறு என்று டிரம்ப் கூறுவதாகவும் தெரிவித்தார். 

கடந்த வாரம் டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையைத் தொடங்க சுமார் 70 நாடுகள் டிரம்ப் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டுள்ளதாக லீவிட் விவரித்தார். 

டிரம்ப் அனைத்து இறக்குமதிகளுக்கும் 10 விழுக்காடு குறைந்தபட்ச வரியை முன்னதாக அறிவித்தார்.

மேலும் சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளிகள் மீது கூடுதல் பரஸ்பர வரிகளை விதிக்கப்போவதாக அவர் கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]