பொது

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட மீட்புத் துறை ஊழியருக்கு நீரிழப்பு

03/04/2025 05:22 PM

புத்ரா ஹைட்ஸ், 03 ஏப்ரல் (பெர்னாமா) -- புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்ததினால் ஏற்பட்ட தீயை, அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, JBPM (ஜே.பி.பி.எம்)   உறுப்பினர் ஒருவர் நீரிழப்புக்கு ஆளானார்.

மிகப் பெரிய பகுதியில் ஏற்பட்ட அதீத வெப்பநிலை மற்றும் பாதிக்கப்பட்ட அதிகமானோரை வெளியேற்றிய சவால்களை ஜே.பி.பி.எம் உறுப்பினர்கள் எதிர்கொண்டதாக சிலாங்கூர் மாநில ஜே.பி.பி.எம் துணை இயக்குநர் கைரூல் அஸ்வான் இப்ராஹிம் தெரிவித்தார்.

சோதனை மேற்கொண்ட பகுதியில் வெப்பநிலை மிக அதிகமாக இருந்ததால், மீட்பு மற்றும் தீயை அணைக்கும் பணிகளை மேற்கொள்ளும்போது பணியாளரின் உடலில் நீரிழப்பு மற்றும் ஆக்ஸிஜன் குறைவு ஏற்பட்டதாக கைரூல் அஸ்வான் கூறினார்.

இருப்பினும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு படையைச் சேர்ந்த அவருக்கு 20 நிமிடங்கள் சிகிச்சை வழங்கப்பட்டது.

அதன் பின்னர், அவரின் உடல் நிலை சீராண பிறகு, தீயணைப்புப் பணிகளை மீண்டும் தொடங்கியதாக கைரூல் அஸ்வான் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இச்சம்வத்தினால், 100 அடி உயரம் வரை எழுந்த தீயின் வெப்பநிலை 1,000 பாகை செல்சியஸ் வரை பதிவு செய்யப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)