பொது

தீ விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகவில்லை

01/04/2025 07:43 PM

புத்ரா ஹைட்ஸ், 01 ஏப்ரல் (பெர்னாமா) -- தீ விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று, சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 145 பேரில் 41 பேர் வீடு திரும்பி இருப்பதாக, அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

சிகிச்சை பெறுபவர்கள் சீரான நிலையில் இருப்பதாகவும், யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும், செர்டாங் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பவர்களை பார்வையிட்ட பின்னர் டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.

புத்ராஜெயா மருத்துவமனையில் 13 பேரும், செர்டாங் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் 28 பேரும், சைபர்ஜெயா மருத்துவமனையில் 24 பேரும், அம்பாங் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 37 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)