விளையாட்டு

பெயர்ன் முனிச்; 3-2 என்ற கோல்களில் வெற்றி பெற்றது

30/03/2025 05:43 PM

முனிக் , 30 மார்ச் (பெர்னாமா) - பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டி.

சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செயின்ட் பவுலிடன் களம் கண்ட பெயர்ன் முனிச் 3-2 என்ற கோல்களில் வெற்றி பெற்றது.

சொந்த அரங்கில் விளையாடிய பெயர்ன் முனிச் 17-வது நிமிடத்தில் ஹெரி கேன்  மூலம் முதல் கோலை அடித்து முன்னணி வகிக்க தொடங்கியது.

27-வது நிமிடத்தில் அடித்த கோலின் மூலம் செயின் பவுலி ஆட்டத்தை சமப்படுத்தியது.

முதல் பாதி ஆட்டம் 1-1 என்று சமநிலை கண்ட வேளையில், இரண்டாம் பாதி ஆட்டத்தின் 53 மற்றும் 71-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து லெரோய் சென் பெயர்ன் முனிக்கின் வெற்றியை உறுதி செய்தார்.

கோல் போடும் தீவிர முயற்சியின் பயனாக, ஆட்டம் முடிவடைய இன்னும் சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் செயின் பவுலி தனது இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தது.

இந்த வெற்றியின் வழி பெயர்ன் முனிச் 65 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)